ETV Bharat / bharat

'நான் இறந்தால் மவுன அஞ்சலி செலுத்த வேண்டாம்' - கண்கலங்கிய மைத்ரேயன் - எம்பி உரை

டெல்லி: நேற்றுடன் அதிமுக எம்.பி. மைத்ரேயனின் பதவிக்காலம் முடிந்தநிலையில், 'நான் இறந்தால்கூட நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலியோ, இரங்கலோ தெரிவிக்க வேண்டாம்' என்று கண்ணீர் மல்க மாநிலங்களவையில் உரையாற்றியபோது கேட்டுக் கொண்டார்.

maitreyan
author img

By

Published : Jul 25, 2019, 11:33 AM IST

மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த மைத்ரேயன், அர்ஜுனன், லஷ்மணன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரான டி. ராஜா உள்ளிட்டோரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் மைத்ரேயன் பேசுகையில், அதிமுகவில் மூன்று முறை மாநிலங்களவை எம்பியாக இருந்த ஒரே எம்பி தான் மட்டுமே என்றார். இதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என தெரிவித்த மைத்ரேயன், அவர்தான் தன்னை மாநிலங்களவைக்கு அனுப்பிவைத்ததாகவும் பெருமிதத்துடன் கூறினார். அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று பேசும்போதே கண்கலங்கி அழுதார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதுவரை மாநிலங்களவையில் 14 ஆண்டு காலம் மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளேன். மீனவர்கள், ஈழத்தமிழர்கள் படுகொலை என ஒவ்வொரு முறையும் உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளேன். ஆனால் ஒரு முறை கூட ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு இந்த அவை மவுன அஞ்சலியோ, இரங்கலோ தெரிவிக்கவில்லை.

இரங்கல் தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அவர்கள் உயிரிழந்ததை கவனத்தில் கூட எடுத்துக் கொள்ளவில்லை. இந்தச் சம்பவம் என்றும் எம்மனதில் வேதனையோடு இருக்கும்" என்றார்.

ஒரு வேளை தான் இறந்தால் நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலியோ, இரங்கலோ தெரிவிக்க வேண்டாம் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

இந்த அவையில் தன்னை ஒரு சகோதரர் போல் வழிநடத்தியவர் அருண் ஜேட்லி என்று சொன்ன மைத்ரேயன், அவர் பூரண குணமடைந்து ஆரோக்கியமாக திரும்ப வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும், குலாம் நபி ஆசாத், ஸ்மிருதி இரானி, டி. ராஜா உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.