மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மோடி, நேற்று புனே, சதாராவில் இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, ‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நடுத்தர மக்களின் பங்களிப்பு முக்கியமானது. ஊழல் செய்பவர்கள் மீது எடுக்கப்பட்டுவரும் கடுமையான நடவடிக்கைகள் தொடரும். அரசியல் பலம் வாய்ந்த பல தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது மக்களுக்கு நன்றாகத் தெரியும். மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை மீட்டு மீண்டும் உங்களிடமே கொடுக்கும் வரை நான் ஓயமாட்டேன்’ என்று உரையாற்றினார்.
இதையும் படிங்க: 'மக்கள் முன்பு பேசமுடியாத நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளது' - ஓ.பன்னீர் செல்வம்