மலேசியாவில் 2018ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், மகாதீர் முகமது தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சி, அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதிக்கட்சி, மேலும் சில சிறிய கட்சிகளைச் சேர்த்த 'Pact of Hope' என்ற கூட்டணி அமோக வெற்றிபெற்றது.
இதையடுத்து, மகாதீர் முகம்மது அந்நாட்டு பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக, கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது தாம் குறிப்பிட்ட காலம்வரை பிரதமராகப் பதவி வகித்த பிறகு, அன்வர் இப்ராஹிமிடம் ஆட்சியை ஒப்படைப்பதாக மகாதீர் வாக்களித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற இப்ராஹிமிடம் ஆட்சியை ஒப்படைக்குமாறு அவரது ஆதரவாளர்கள் மகாதீரை வலியுறுத்தினர். இதனை மகாதீர் ஏற்க மறுத்ததால் அவர் கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பிரதமர் மகாதீர் கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 24) அந்நாட்டு மன்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து, கூட்டணியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையை அடுத்து, மகாதீர் முகமதுவை மீண்டும் பிரதமர் வேட்பாளராக 'Pact of Hope' கூட்டணி அறிவித்துள்ளது.
முன்னதாக, மலேசிய ஐக்கிய சுதேச கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிமை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளது.
இதையும் படிங்க : பாராட்டு மழையில் நனையும் சிறுவன் குவாடன்!