ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்! - மகாராஷ்டிரா தேர்தல்

prez rule
author img

By

Published : Nov 12, 2019, 5:41 PM IST

Updated : Nov 12, 2019, 8:39 PM IST

17:34 November 12

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகின்ற நிலையில், கூட்டணி கட்சிகளான பாஜக-சிவசேனா இடையே ஆட்சி அமைப்பது குறித்து தொடர் மாற்றுக் கருத்து நிலவிவந்தது. தங்கள் கட்சியிலிருந்துதான் முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என இரு கட்சிகளும் தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்தன. 

இரு கட்சிகளிடையே சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில், ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், தன்னால் ஆட்சியமைக்க முடியாது என அவர் கூறியதால் இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். காங்கிரஸ் கட்சி சிவசேனாவுக்கு ஆதரவளிக்க மறுத்ததால் அவர்களாலும் ஆட்சியமைக்க இயலவில்லை.

இதனையடுத்து, மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் இன்று (12/11/2019) இரவு 8:30 மணி வரை கால அவகாசம் கொடுத்திருந்தார். ஆனால் அவகாசம் முடிவடைவதற்குள்ளாகவே அம்மாநில ஆளுநர் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைத்தார். அவரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி மகாராஷ்டிராவில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. 

இதையும் படிங்க: உள்ளாட்சி உங்களாட்சி - பகுதி - 1 

Intro:Body:

Maharastra prez rule

Conclusion:
Last Updated : Nov 12, 2019, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.