ETV Bharat / bharat

#Live மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்! - மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்

Maharastra haryana live updates
author img

By

Published : Oct 24, 2019, 7:55 AM IST

Updated : Oct 24, 2019, 8:24 PM IST

20:15 October 24

ஹரியானாவில் ஆட்சி அமைக்க சுயேச்சைகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில், வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர்களை பாஜக டெல்லிக்கு அழைத்துச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

17:23 October 24

துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஆளுநரை சந்திக்க ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அனுமதி கேட்டுள்ளார்.
 
17:03 October 24

ஹரியானாவில் பாஜக ஆட்சி?

துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

16:54 October 24

இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி அமைப்போம் - பாஜக உறுதி

தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க பாஜகவின் நாடாளுமன்றக் குழு கூட்டம் விரைவில் கூடவுள்ளது.

வாரணாசியில் உள்ள கட்சித் தொண்டர்களிடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார்.

16:36 October 24

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவி யாருக்கு? - பதிலளிக்கிறார் உத்தவ் தாக்கரே

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, "முதலமைச்சர் பதவி குறித்த ஆலோசனை சென்றுகொண்டிருக்கிறது. இது குறித்து பார்முலாவை மக்களவைத் தேர்தலுக்கு முன்பே வகுத்துவிட்டோம். ஆட்சி அமைப்பதில் சரி பாதி பங்கு வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

16:30 October 24

பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிவருகின்றனர். சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார். 

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா ஆகியோர் ஆலோசிக்கவுள்ளனர்.

16:20 October 24

மகாராஷ்டிராவில் சிவசேனா முதலமைச்சர்?

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், முதலமைச்சர் பதவியை சிவசேனா கேட்பதாகக் கூறப்படுகிறது. பாஜக 98 இடங்களிலும் சிவ சேனா 57 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 
 
15:59 October 24

ஹரியானாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?

துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சிக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இவரின் கட்சி 10 இடங்களில் முன்னிலையில் உள்ளதால், கூட்டணி ஆட்சியமைக்க காங்கிரஸ் முயன்றுவருகிறது. ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

15:54 October 24

ஹரியானாவில் தொடர் இழுபறி

பாஜக 39 இடங்களிலும் காங்கிரஸ் 32 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் முன்னிலை உள்ளது. ஹரியானாவில் ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவைப்படுவதால், இந்தக் கட்சி யாருக்கு ஆதரவு தருகிறதோ அந்தக் கட்சியே ஹரியானாவில் ஆட்சி அமைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

15:41 October 24

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி முன்னிலை

பாஜக 97 இடங்களிலும் சிவ சேனா 59 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

காங்கிரஸ் 42 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 55 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

220 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 158 இடங்களில் அக்கூட்டணி முன்னிலையில்  உள்ளது.

12:04 October 24

மகாராஷ்டிராவில் பாஜக+ 160, காங்கிரஸ்+ 99, மற்றவை 26 இடங்களில் முன்னிலை

ஹரியானாவில் பாஜக+ 42, காங்கிரஸ்+ 26, மற்றவை 8 தொகுதிகளில் முன்னிலை 

10:24 October 24

மகாராஷ்டிராவில் பாஜக+ 185, காங்கிரஸ்+ 88, மற்றவை 15 இடங்களில் முன்னிலை

10:23 October 24

ஹரியானாவில் பாஜக+ 40, காங்கிரஸ்+ 30, மற்றவை 12 தொகுதிகளில் முன்னிலை 

09:29 October 24

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே ஓர்லி தொகுதியில் முன்னிலை

09:25 October 24

ஆதித்யா தாக்கரே
ஆதித்யா தாக்கரே

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் 18 தொகுதிகளில் முன்னிலை 

08:58 October 24

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 160, காங்கிரஸ் கூட்டணி  66 இடங்களில் முன்னிலை
 
08:51 October 24

ஹரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் கர்னால் தொகுதியில் முன்னிலை 
காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கைதால் தொகுதியில் முன்னிலை 

08:45 October 24

மகாராஷ்டிராவின் சோலாபூர் சிட்டி சென்ட்ரல் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் மகள் பிரனிதி ஷிண்டே பின்னடைவு

08:38 October 24

மகாராஷ்டிராவின் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலை

08:28 October 24

மகாராஷ்டிரா, ஹரியானாவில் - பாஜக முன்னிலை

08:21 October 24

மகாராஷ்டிராவின் கொலாபாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

08:14 October 24

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

08:08 October 24

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாவதையொட்டி பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களில் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

08:02 October 24

பாஜக அலுவலகங்களில் லட்டுகள் தயார் நிலையில்

288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கும், 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்திற்கும் கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

07:20 October 24

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.

Intro:Body:

Maharastra haryana live updates

Conclusion:
Last Updated : Oct 24, 2019, 8:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.