மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று தொடங்கியது. வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கியதை அடுத்து வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது. 3,237 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஹரியானா மாநிலம் 90 தொகுதிகளைக்கொண்டது. 169 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இரு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது வருகின்ற 24ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தெரியவரும்.
இதையும் படிங்க: ஹரியானா பாஜக வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!