புனே: மொபைலில் முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்த கணவர் மீது மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகமத்நகர் மாவட்டத்தில் வசிக்கும் பெண்மணி ஒருவர், துபாயில் வேலை செய்துவந்தார். பின்னர் அகமத்நகர் வந்து இங்கு ஒரு ப்ளாட் வாங்கியிருக்கிறார். துபாய் செல்லும் முன்பு மும்பையில் வேலை பார்த்துவந்த அப்பெண்மணியின் கணவர் மும்பையில் இருக்கிறார். நவம்பர் 20ஆம் தேதி தனது மனைவிக்கு மொபைலில் அழைத்த அவர், இனி உன்னுடன் வாழ விருப்பமில்லை என முத்தலாக் சொல்லியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண்மணி பிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
உடனடியாக விவகாரத்து பெறும் இஸ்லாமிய முறை, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அதற்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.