ETV Bharat / bharat

ஆந்திராவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் 'திஷா' சட்டம்? - ஜெகன் மோகன் ரெட்டி திஷா சட்டம்

மும்பை: பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு எதிராக ஆந்திராவில் ஜெகன் தலைமையிலான அரசு கொண்டுவந்துள்ள திஷா சட்டத்தை மாகாராஷ்டிராவிலும் கொண்டுவர சிவசேனா அரசு பரிசீலிக்கவுள்ளது.

Disha Act
Disha Act
author img

By

Published : Feb 24, 2020, 12:19 PM IST

தெலங்கானா மருத்துவர் திஷா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றங்களை கட்டுப்படுத்தும் விதமாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் தரப்பட்டன.

இந்தக் கொலைச் சம்பவத்தை பெரிதும் கண்டித்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, திஷா என்ற புதிய சட்டத்தை தனது மாநிலத்தில் நிறைவேற்றியுள்ளார். இதன்படி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களை 21 நாட்களுக்கு விசாரித்து மரண தண்டனை அளிக்கப்படும் எனச் சட்டம் தெரிவிக்கிறது.

இந்தச் சட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில் நடைமுறைபடுத்தும் பரிசீலனையில் ஈடுபட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றத்தை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க ஆவண செய்யும் இந்தச் சட்டத்தை ஆய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது. இந்தக் குழு மார்ச் 30ஆம் தேதிக்குள் அறிக்கையைத் தெரிவிக்கவுள்ளது. மகாராஷ்டிராவைப் போலவே டெல்லி, ஒடிசா ஆகிய அரசுகளும் இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் களமிறங்கவுள்ளன.

இதையும் படிங்க: கொரோனா பீதி: இத்தாலியில் உலகப் புகழ்பெற்ற திருவிழா ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.