ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!

மும்பை: ஆளுநர் பகத்சிங் சிவசேனா கட்சியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

shiv sena alliance ncp
author img

By

Published : Nov 10, 2019, 9:05 PM IST

மகாராஷ்டிரத்தில் இன்று மாலை பாஜக கட்சி சார்பில், அக்கட்சித் தலைவர் சந்தரகாண்ட் பட்டேல், ஆளுநர் பகத் சிங்கை நேரில் சந்தித்து பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சியமைக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து ஆளுநர் மாளிகை ராஜ்பவன் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது,' மகாராஷ்டிரத்தில் சுழற்சி முறையில் ஆட்சியமைக்கக் கோரிய சிவசேனா தங்களின் நிலைப்பாட்டில் விடாப்படியாக இருக்கிறது. அதனால் பெரும்பான்மை இல்லாத பாஜகவால் தற்போது ஆட்சியமைக்க இயலவில்லை' என்றார்.

மேலும் பேசியவர், 'சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க நினைத்தால் அதற்கு நல்வாழ்த்துகள்' எனக் கூறினார்.

இந்நிலையில், 'கூடிய விரைவில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்போம்' என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடியாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஆளுநர் பகத்சிங் கோசியாரி பாஜகவிற்கு அடுத்தபடியாக அதிக இடங்களை கைப்பற்றியிருக்கும் சிவசேனா கட்சியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதுகுறித்து தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவருடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தரப்பில் இருந்து, காங்கிரஸ் கட்சித் தலைமை என்ன தெரிவிக்கிறதோ அதன்படி, தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடப்பார்கள் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அசோக் சாவன் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் 288 தொகுதிகளில் 105 தொகுதிகளில் பாஜகவும், 56 தொகுதிகளில் சிவசேனாவும், காங்கிரஸ் 44 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளும், மற்றக் கட்சிகள் 29 தொகுதிகளும் கைப்பற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அயோத்தி தீர்ப்பை பாஜக சொந்தம் கொண்டாட முடியாது - உத்தவ் தாக்ரே!

Intro:Body:

Maharashtra BJP not to form government  

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.