இந்தியாவில் கரோனா வைரஸ் தலைநகரமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. அதிவேகமாகப் பரவும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் அம்மாநில அரசு தவித்து வருகிறது.
நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு பிரதமர் மோடி இன்று ஊரடங்கை நீட்டிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக, ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘ஊரடங்கு உத்தரவை நீட்டித்தால் வரவேற்போம்’ - பகுஜன் சமாஜ்