மகாராஷ்டிரா மாநிலம் வானி பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவினார்கள். நமது வீரா்களின் தலை துண்டிக்கப்பட்டது. இந்திய எல்லையில் ஊடுறுவல் என்பது சர்வசாதாரணமாக நடந்தது.
காங்கிரஸ் என்ன செய்தது? ஆனால் பாரதிய ஜனதா அரசு உரி, பாலகோட் தாக்குதலுக்கு துல்லிய தாக்குதல், வான்வெளித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அவர்களின் பாணியிலியே பதிலடி கொடுக்கப்பட்டது இதுதான் முதல்முறை. அதனை பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் துயரத்துக்கு சட்டப்பிரிவு 370 தான் காரணம். இது தெரிந்தும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் அதனை நீக்கவில்லை.
ஜம்மு-காஷ்மீரில் நிலவி வந்த பயங்கரவாதத்துக்கு இதுவரை 40 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். எனினும் அதற்கு காரணமாக சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என காங்கிரஸ் நினைத்ததில்லை. வாக்கு வங்கி அரசியலை கவனத்தில் கொண்டு இவ்வாறு நடந்துக் கொண்டது.
மக்களவைத் தேர்தலில் நீங்கள் எங்களுக்கு 300 தொகுதிகள் கொடுத்தீர்கள். நாங்கள் 370 சட்டப்பிரிவை நீக்கினோம். தற்போது காஷ்மீரில் அமைதி நிலவுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் வீர சிவாஜி, வீர சாவர்கள் வாழ்ந்த மண். இந்த மண் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த பல மகான்களை ஈன்றுள்ளது. ஆனால் ராகுல் காந்தி என்ன சொல்கிறார்? வீரமரணம் அடைந்த பாதுகாப்பு வீரரின் மனைவியை விதவை என்று அவமதிக்கிறார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி பெறமுடியும். மகாராஷ்டிரா மாநில வளர்ச்சிக்காக பாஜக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. வருகிற 24ஆம் தேதியே மகாராஷ்டிராவுக்கு முன்கூட்டியே தீபாவளி வருகிறது. அன்றைய தினம் மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார்.
இதையும் படிங்க: கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை