மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக கட்சியும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், மும்பை காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான சஞ்சய் நிருபம் மகாராஷ்ட்ரா சட்டபேரவை தேர்தல் பரப்புரைகளில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கட்சியை விட்டு வெளியேறவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் கட்சிக்குள் சிக்கல்கள் இப்படியே தொடரும் பட்சத்தில், நீண்டகாலம் என்னால் கட்சியில் இருக்க முடியாது" என்றார்.
மேலும், காங்கிரஸில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாவும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் பரிந்துரைத்த வேட்பாளர் ஒருவரையும் கூட மகாராஷ்டிரா காங்கிரஸ் நிராகரித்ததுள்ளது வேதனையளிக்கிறது என்றார்.
இதையும் படிங்க: வேலையின்மை குறித்து மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி