மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோன் பகுதியைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஜல்கோன் அரசு தலைமை மருத்துவமனையில் ஜூன் ஒன்றாம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அடுத்த நாளே அவர் காணாமல் போய்விட்டதாக அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் கடந்த ஆறாம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த 82 வயது பெண்மணி ஒருவரைக் காணவில்லை என புகாரளித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், காணமல்போன பெண்மணி மருத்துவமனை கழிவறையில் சடலாமாக மீீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும், முதலமைச்சருக்கு தகவலளிக்குமாறும் உத்தரவிட்டார்.
முன்னதாக மக்கள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீளாமல் இருக்கும் நிலையில், மருத்துவமனை கழிவறையிலிருந்து கரோனா நோயாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.