ETV Bharat / bharat

'மகாராஷ்டிராவில் இலவச பேருந்து பயணம்'- சிவசேனா அரசு அதிரடி - மகாராஷ்டிரா தொழிலாளர்கள் பிரச்னை

மும்பை: கரோனா முழு அடைப்பு காரணமாக, மாநிலத்துக்குள் ஆங்காங்கே சிக்கி தவிப்பவர்கள் சொந்த ஊருக்கும் திரும்பும் வகையில் கட்டணமில்லாத பேருந்து சேவைகள் திங்கள்கிழமை (மே11) முதல் தொடங்கும் என அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் அனில் பாரப் கூறினார்.

Anil Parab  Transport Minister  containment zones  coronavirus  மகாராஷ்டிரா கட்டணமில்லாத பேருந்து பயணம்  மகாராஷ்டிரா தொழிலாளர்கள் பிரச்னை  கரோனா பாதிப்பு

author img

By

Published : May 10, 2020, 10:50 AM IST

மகாராஷ்டிரா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் அனில் பாரப் கூறுகையில், “மாநிலத்துக்குள் ஆங்காங்கே சிக்கி தவிப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதை உறுதி செய்யும் வகையில், நிபந்தனையின் பேரில் மாநில அரசு கட்டணமில்லாத பேருந்து சேவையை மே11 (திங்கள்கிழமை) முதல் தொடங்குகிறது.

இந்தச் சேவையை தொழிலாளர்கள், யாத்ரீகர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் இருக்கும் மக்கள் சேவையை பெற தகுதியற்றவர்கள் ஆகிறார்கள்.

முதலாவதாக, மாநிலத்துக்குள் பிற பகுதிகளுக்குள் சிக்கி தவிப்பவர்கள் சொந்த ஊர் செல்ல விரும்பினால், அவர்கள் தங்கள் பயணம் தொடர்பான விவரங்களை காவல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு 22 பேர் விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு ஒரு பேருந்து வசதி செய்துகொடுக்கப்படும். ஒரு இருக்கையில் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்.

பயணிகள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். கை, கால்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். மேலும் தகுந்த இடைவெளி உள்ளிட்ட அரசின் அனைத்து விதிகளும் கடைப்பிடிக்கப்படும்.

வாகனங்கள் உணவகங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் நிறுத்தப்படாது. பயணிகளே உணவுக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்” என்றார். நாட்டிலேயே அதிகம் கரோனா பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.

இதையும் படிங்க: 'ரூ.30 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குக'- சத்தீஸ்கர் முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.