இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை என்.டி. ராமாராவுக்கு வழங்க மத்திய அரசு ஆவண செய்யவேண்டும் என வலியுறுத்தி மகாநாடு இரண்டாம் நாள் நிகழ்வில் தீர்மானம் இயற்றப்பட்டது.
என்.டி.ஆர் என்று அறியப்படுகிற ராமாராவ் 1982ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கி 10 மாதத்திற்குள் ஆந்திராவின் முதலமைச்சரானார். மகாநாடு இரண்டாம் நாள் நிகழ்வில் என்.டி.ஆருக்கு அஞ்சலி செலுத்திய பின்பு பேசிய சந்திரபாபு நாயுடு, "என்.டி.ஆர் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரத்தை எதிர்த்து மாற்று சக்தியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆரம்பத்திலிருந்தே ஏழை, பின்தங்கிய மக்களின் மனதில் வலுவான இடத்தை தெலுங்கு தேசம் கட்சி பெற்றிருப்பதால், அதன் அஸ்திவாரத்தை யாராலும் அசைக்க முடியாது. குறிப்பாக இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தார்" என்று தெரிவித்தார்.
மேலும், "தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை, சுயமரியாதையுடன் எதிர்கொள்வோம். இந்த வழக்குகள் மூலம் கட்சி நிர்வாகிகளை பயமுறுத்த முடியாது. ஆளும் கட்சியின் மிரட்டலுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் அடிபணியமாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கரோனா, வெட்டுக்கிளி, அதிக வெப்பம் எனத் தொடர் பிரச்னைகள் வருகின்றன': ஹர்ஷ் வர்தன்