மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன.
இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதித் துறை, திட்டத் துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் முதலமைச்சரின் மகனான ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் துறையும் சுற்றுலாத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக்கிற்கு உள் துறை, ஜெயந்த் பாட்டீலுக்கு நீர்பாசனத் துறை, நவாப் மாலிக்கிற்கு சிறுபான்மையின நலத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், சிவசேனா, காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் இந்தப் பட்டியலுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார். டிசம்பர் 30ஆம் தேதி மூன்று கட்சிகளிலிருந்தும் மொத்தம் 36 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் 110 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தகவல்