ETV Bharat / bharat

கொரோனா அலர்ட்: மும்பையில் திரையரங்குகள், மால்கள் மூட உத்தரவு! - theatre and malls closed at maharashtra

மும்பை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள், நீச்சல் குளம், ஷாப்பிங் மால் அனைத்தும் தற்காலிமாக மூடப்படுவதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே
author img

By

Published : Mar 13, 2020, 9:41 PM IST

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இதனால், அரசு மக்களுக்குத் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், மும்பை, நேவி மும்பை, புனே, பிம்ப்ரி சின்ச்வாட், நாக்பூர் நகரங்களில் உள்ள தியேட்டர், ஜிம்கள், நீச்சல் குளங்கள், மால்களை இன்று நள்ளிரவு முதல் மூடுவதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

இதை அதிகாரப்பூர்வமாக மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். மேலும், அவர் கூறுகையில் ,"1897ஆம் ஆண்டின் தொற்று நோய்கள் அவசர சட்டத்தை, இன்று நள்ளிரவு முதல் செயல்படுத்துகிறோம்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு சாத்தியமான தருணத்தில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். அடுத்த அறிவிப்பு வரும் வரை புனே, பிம்ப்ரி சின்ச்வாட் (Pimpri Chinchwad) பகுதிகளில் பள்ளிகள் மூடப்படும்" என்றார்.

இதையும் படிங்க: என்பிஆரில் 'டி' இல்லை - அமித் ஷா விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.