மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பணிபுரிந்து வந்த 27 வயதான உதவியாளர் ஒருவர், அங்கிருந்த பெண்னை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின்படி, கடந்த ஜூன் மாதம் தானேவில் மீரா பகுதியில் உள்ள கரோனா தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுவனை கவனித்துக்கொள்வதற்காக அந்த பெண் தனது 10 மாத குழந்தையுடன் தங்கியிருந்துள்ளார். அவர்களுக்கு தினமும் இரவு ஹாட் வாட்டர் வழங்க வரும் உதவியாளர், திடீரென அப்பெண்ணிடம் தவறாக ஈடுபட முயற்சி செய்துள்ளார்.
அப்பெண் முரண்டு பிடிக்கவும் குழந்தையை கொன்று விடுவேன் என மிரட்டி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதே போல், மூன்று முறை கரோனா தனிமை மையத்தில் பெண்ணிடம் வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்நபரால் தனது குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற பயத்திலே, இத்தனை நாள்களாக காவல் துறையில் புகார் அளிக்காமல் அப்பெண் இருந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து குற்றஞ்சாட்டப்பட்ட நபரை கைது செய்தனர். இரண்டு மாதங்களுக்கு பிறகு இச்சம்பவம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.