ETV Bharat / bharat

'நீட் தேர்வை கைவிடுங்கள்' - நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் பேச்சு - From Anitha To JothiSri Durga

நீதியும், தேர்வும், மனுநீதியின் சாயலாகவும், சாரமாகவும் மாறிவிடக்கூடாது என்பதால் கேட்கிறோம். நீட் தேர்வினை கைவிடுங்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பரிந்துரைத்துள்ளார்.

Madurai MP SU.Venkatesan Talks about BAN NEET Exam in Parliament

author img

By

Published : Sep 15, 2020, 6:59 PM IST

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இன்று (செப்டம்பர் 15) தொடங்கியது. இதில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நீட் தேர்வைக் கைவிடக்கோரி பேசியுள்ளார்.

அதில், ''அனிதா முதல் எனது தொகுதியைச் சார்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா வரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட மாணவர்களின் மரணத்தின் தீராத்துயரத்திலிருந்து மீளாவேதனையுடன் கேட்கிறோம். எப்பொழுது நீட் தேர்வினை கைவிடுவீர்கள்?

நீட் எனும் திரிசூலத்தில் மூன்று முனை இருக்கிறது. ஒரு முனை, மாநில அரசின் கல்வி முறையையும், மாநில உரிமையையும் குத்திக்கிழிக்கிறது, மற்றொரு முனை டீச்சிங்கை கொன்று, கோச்சிங்கை கொண்டாடுகிறது. மூன்றாவது முனை மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்குத் தள்ளுகிறது. இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணங்களுக்குப் பின் இந்தக் கொலை வாளினை கீழே போடுவீர்கள்? என்று நாங்கள் கேட்கிறோம்.

நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் பேச்சு

தமிழ்நாடு சட்டப்பேரவை மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பியது. குடியரசுத் தலைவர் அதனை திருப்பி அனுப்பினார். அரசமைப்புச் சட்டம் 201இன் படி மசோதாவை திருப்பி அனுப்பினால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் இன்றுவரை காரணம் தெரிவிக்கப்படவில்லை. இது பற்றி நீதித்துறை ஆளுமைகள் வாய் திறப்பதில்லை. ஆனால் திரைக் கலைஞர் சூர்யா நீட் பற்றி ஒரு வார்த்தை சொன்னால் உடனே எதிர்வினை புரிகிறார்கள்.

நீதியும், தேர்வும், மனுநீதியின் சாயலாகவும், சாரமாகவும் மாறிவிடக்கூடாது என்பதால் கேட்கிறோம். நீட் தேர்வினை கைவிடுங்கள்'' என்றார்.

இதையும் படிங்க: மாநிலங்களவையின் துணைத் தலைவராக ஹரிவன்ஸ் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.