2017ஆம் ஆண்டு நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறைகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்தக் குற்றச்சாட்டுகளையடுத்து, அதில் ஊழல் நடந்த என்ற விசாரணை நடத்தப்பட்டு வந்து. அதுகுறித்த குற்றப்பத்திரிகையைக் கேட்டு அச்சல் குமார் தூபே என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அதனோடு, குற்றஞ்சாட்டப்பட்ட அலுவலர் தனக்கு வழங்கப்பட்ட துறைசார் குற்றப்பத்திரிகைக்கு அளித்த பதிலின் நகலையும் அவர் கோரியிருந்தார்.
ஆனால் இவரின் கோரிக்கைக்கு சரியான பதில்களை சம்பந்தப்பட்ட துறையினர் வழங்கவில்லை. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தை தகவல் ஆணையரிடம் தூபே முறையிட்டார்.
அந்த விசாரணையில் பொது தகவல் அலுவலர் பேசுகையில், '' நான் அனைத்து கோப்புகளையும் வழங்குவதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் அந்தக் கோரிக்கை சம்பந்தப்பட்ட கோப்புகள் வேறு துறையினரிடம் இருந்ததால் என்னால் பெற இயலவில்லை'' என்றார். ஆனால் அவரின் பதிலுக்கு அவரால் ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்க முடியவில்லை.
இதனைத்தொடர்ந்து தகவல் ஆணையர் ராகுல் சிங் தனது உத்தரவில், ''பொது தகவல் அலுவலர் இந்த விவகாரத்தில் பல்வேறு தவறுகள் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட துறையினர் தகவல் தர மறுத்தால், அவர்களிடம் தகவல் அறியும் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். தூபே பலமுறை அணுகியபோதும், அவர் ஆதாரங்களை வேண்டுமென்றே கொடுக்க தாமதம் செய்துள்ளார். இதுபோன்ற தகவல் அறியும் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணும்போது நீதித்துறை பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விண்ணப்பத்திற்கு வேண்டுமென்றே தகவல்களை மறைத்ததற்காக வருவாய்த் துறை செயலாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சீன விவகாரம்: கேள்விக் கேட்டால் தேசத்துரோகமா?- ப.சிதம்பரம்