பை பாப் (BiPA)P என்பது உடலில் குழாய் பொருத்தாமலே சுவாசிக்க உதவும் கருவியாகும். ஆனால், இந்தியாவில் விநியோகிக்கப்பட்டுள்ள மேன் இன் இந்தியா வென்டிலேட்டர்களில் BiPAP (Bilevel Positive Airway Pressure) வசதி இல்லை என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. இது பெரும் சர்ச்சையை மக்கள் மத்தியில் எழுப்பியது.
இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் விநியோகிக்கப்பட்டுள்ள மேட் இன் இந்தியா வென்டிலேட்டர்கள் அனைத்திலும் பை பாப் (BiPAP) வசதி உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு வென்டிலேட்டர் மாதிரிகள் பி.இ.எல், அக்வா ஆகியவை அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தொழில்நுட்பக் குழு வகுத்துள்ள விவரக்குறிப்புகளின்படியும் தேவைகளுக்கும் ஏற்ப வழங்கப்பட்டுள்ளது.
குறைவான செலவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வென்டிலேட்டர்களில் பைபாப் வசதி உள்ளது. வென்டிலேட்டர் உபயோக்கும் முறை அடங்கிய படிவமும் வழங்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.