உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசுக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் சில தனியாரின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
இதில் சம்மந்தப்பட்ட நபர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி மாநில காவல்துறையினர் பதாகைகளை ஆங்காங்கே நிறுவினர்.
அந்த பதாகைகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் படங்கள் மற்றும் முகவரிகள் அச்சிடப்பட்டிருந்தது. இதனை நீக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : 'முதலில் பதாகையை நீக்குங்கள்' - யோகி அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி