ETV Bharat / bharat

சிலிண்டர் விலை வீழ்ச்சி - மானியத்தொகையை நிறுத்த மத்திய அரசு திட்டம்?

டெல்லி: சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் குறைந்துள்ளதால், இந்த மாதத்திற்கான மானியத் தொகையை மத்திய அரசு செலுத்தாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

GAS
GAS
author img

By

Published : May 3, 2020, 1:35 PM IST

நாட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படுகின்றன. அதற்கும் மேல் சிலிண்டர்கள் வாங்க விரும்புபவர்கள் சிலிண்டரை, சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.

இந்நிலையில், கரோனா பெருந்தொற்றால் உலக நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக விமானம், ரயில், சாலை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் தேவை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

முன்னர், பீப்பாய் ஒன்றுக்கு இரண்டாயிரத்து 651 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய், தற்போது ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய்யைப் போலவே, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் 162 ரூபாய் குறைந்து 581.50 ரூபாயாக விற்கப்படுகிறது.

இந்த விலை குறைவு காரணமாக, இந்த மாதம் முதல், சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகையை மத்திய அரசு பொதுமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தாது என அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த அலுவலர், "சமையல் எரிவாயுவின் விலை குறைந்துள்ளதால், குடும்பங்களுக்கு அரசாங்கம் மானியத் தொகை செலுத்தாது. உஜ்வாலா திட்ட பயனாளர்களுக்காகச் செலுத்தப்படும் மானியத்தொகையும் மிகவும் குறைவே.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், அடுத்த நிதியாண்டில் இந்த திட்டத்தை முழுமையாக நிறுத்திவிட்டு, அதற்கான நிதியை கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

சமையல் எரிவாயு மானியத் திட்டத்துக்காக இந்த நிதியாண்டு (2020-21) 34 ஆயிரத்து 85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை (2019-20) விட ஒன்பது விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பச்சை மண்டலமாகவே தொடரும் கிருஷ்ணகிரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.