ஜம்மு காஷ்மீர் பகுதியில் இன்று காலை 12 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதை வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வானநிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை சரியாக 11.40 மணியளவில், புமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. அதேபோல கட்டடங்களிலும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: ஜாமியா பல்கலைக்கழக வன்முறை - 70 பேரின் புகைப்படங்கள் வெளியீடு