உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டம் பினா-ஜான்சி ரயில்பாதையில் இருவரின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டனர்.
இது குறித்து காவல் கண்காணிப்பாளர் பேக் கூறுகையில், ”உயிரிழந்தவரில் ஒருவர் பல்லு (22), மற்றொருவர் ரேஷ்மி (18) என விசாரணையில் தெரியவந்தது. உறவினர்களான இருவரும் காதலித்து வந்தனர், இதற்கு பெற்றோர்கள் மறுக்கவே தற்கொலை செய்துள்ளனர். பல்லு ஏற்கனவே திருமணமானவர்” என்றார்.
இது குறித்து பல்லுவின் மாமா கூறும்போது, அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கிராமத்தை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் அவர்களுடைய குடும்பத்தார் மத்தியப் பிரதேசத்திலிருந்து இருவரையும் அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார். தற்போது இருவரின் உடல்களும் உடற்கூறாய்வு செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!