உத்தரப் பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மவுதாஹா பகுதியைச் சேர்ந்த சந்தீப்புக்கும், அவருடன் ஒரே வகுப்பில் பயிலும் மாணவிக்கும் இரண்டாண்டுகள் பழக்கம். இருவரும் ஒருவரையொருவர் காதலித்துவந்தனர். இந்தக் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்குத் தெரியவர, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய மாணவி, சந்தீப்புடன் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் சந்தீப்பின் பெற்றோர் முன்னிலையில் நடந்தது. இந்த நிலையில் மாணவியிடம் பேசிய அவரது பெற்றோர் அவரின் மனதை மாற்றினர்.
இதைத்தொடர்ந்து மாணவி, காவல்நிலையத்தில் சந்தீப் குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் சந்தீப், அவரது பெற்றோரை பிடித்து விசாரித்தனர். இதற்கிடையில் மாணவி புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
மேலும் சந்தீப்புடன் வாழ விரும்பவில்லை என்று கூறி அவரது பெற்றோருடன் சென்றார். இது குறித்து சந்தீப் கூறுகையில், “அவளின் தெளிவற்ற மனநிலை, முடிவுகளால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் அவளைக் காதலிக்கிறேன். ஆனால் அவளின் தேவை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனினும் இந்த விஷயம் இத்தோடு முடிந்துவிட்டது என்ற நிம்மதி மட்டும் உள்ளது” என்றார்.
பல சுவாரஸ்யங்கள், திருப்பங்களிலும் இரண்டாண்டுகள் நீடித்த காதல், திருமணம் என்று முழுமைபெறும் நேரத்தில் மகிழ்ச்சி 12 மணி நேரத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூர் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்