கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், நாவில் திடீர் சுவை இழப்பு, வாசனையின்மை ஆகிவற்றை கரோனா அறிகுறிகள் பட்டியலில் சேர்த்து சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒன்பது அறிகுறிகள் கொண்ட பட்டியலில் காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சுத்திணறல், சளி, தசை வலி, மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இருமும்போதும் பேசும்போதும் நெருக்கமாக இருந்தால் வைரஸ் பரவும் அபாயம் அதிகம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேலானவர்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் மிக எளிதாகப் பரவிவிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகளிடம் பாலியல் அத்துமீறல்: தந்தை போக்சோவில் கைது!