புத்தர் தனது முதல் போதனையை செய்த தினமாகக் கருதப்படும் குரு பூர்ணிமா தினம் இன்றும்(ஜூலை 4) நாளையும் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து குரு பூர்ணிமா தின வாழ்த்து செய்தியை பிரதமர் நரேந்திர மோடி இன்று பகிர்ந்துகொண்டார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், 'குரு பூர்ணிமா என்ற சிறப்பான நாளில் நமக்கு அறிவைப் புகட்டிய ஆசிரியர்களை நினைவில் கொள்ள வேண்டும்.
உலக மக்களின் குருவான புத்தருக்கு இந்த நாளில் நாம் நினைவஞ்சலியை செலுத்த வேண்டும். உலகம் தற்போது சந்திக்கும் சவால்களுக்கு புத்தரே சிறந்த வழிகாட்டி. அவரின் சிந்தனைகள் காலம் தாண்டி நிற்பவை. எண்ணங்களிலும் செயல்களிலும் எளிமையை வலியுறுத்தும் புத்தரின் சிந்தனைகள் அன்பையும் மாண்பையும் போதிப்பவை.
புத்தர் காட்டும் எட்டு வாழ்க்கை நெறியைப் பின்பற்றினால், உலக சமூகங்கள் அனைத்தும் மேன்மையுறும்' எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'உலகிற்கே வழிகாட்டும் புத்தரின் தம்மம் என்ற தத்துவத்தை உலகிற்கே அளித்த மண் இந்தியா என்பதை நாம் எண்ணி பெருமைக் கொள்ள வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: சிந்து நதிக்கு பூஜை செய்து வழிபட்ட பிரதமர் மோடி