ETV Bharat / bharat

நீண்ட காலமாகியும் சரியாகாத கரோனா... லாங் கோவிட் குறித்து விவரிக்கும் மருத்துவர்! - ஹோமியோபதி சிகிச்சை நல்ல பலன் தருவதாக மருத்துவர் ஏ.கே. அருண்

நீண்ட நாள்களாக கரோனா தொற்றிலிருந்து மீள முடியாமல் தவித்து வருபவர்களுக்கு ஹோமியோபதி சிகிச்சை நல்ல பலன் தருவதாக மருத்துவர் ஏ.கே. அருண் தெரிவித்துள்ளார்.

c
co
author img

By

Published : Nov 3, 2020, 4:07 PM IST

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. அதேசமயம், கரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. சிலர் கரோனா தொற்றிலிருந்து எளிதாக குணமடைகின்றனர். ஆனால், ஒரு சிலர் ஒரு மாதம் தாண்டியும் கரோனாவிலிருந்து மீளமுடியாமல் திணறி வருகின்றனர். இதை லாங் கோவிட் என அழைக்கின்றனர். இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்காக ஹோமியோபதி மருத்துவர் ஏ.கே. அருணை அணுகினோம்.

லாங் கோவிட் என்றால் என்ன?

‘லாங் கோவிட்’ என்பதற்கு இன்னும் மருத்துவ ரீதியாக விளக்கம் இல்லை. மூச்சுத் திணறல், இருமல், மூட்டு வலி, தசை வலி, கண்பார்வை பிரச்சினைகள், தலைவலி, புதிய வாசனை மற்றும் சுவை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்படும். இதுமட்டுமின்றி இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் குடல் ஆகிய பகுதிகளில் பிரச்னை ஏற்படுகிறது. தொடர் பாதிப்பால் மனதில் ஏற்படும் குழப்பங்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை முற்றிலுமாக அழிக்கக்கூடும்

தீவிர சிகிச்சையில் இருப்பவர்கள் மட்டுமல்ல லேசான தொற்று உள்ளவர்களுக்கும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் இருக்கக்கூடும். 10 பேரில் ஒருவருக்கு 3 வாரங்களுக்குப் பிறகும் COVID-19 அறிகுறிகள் உள்ளன.

இங்கிலாந்தில் சுமார் நான்கு மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 30 நாள்களுக்குப் பிறகும் 12% பேருக்கு அறிகுறிகள் இருப்பதைக் காட்டுகிறது. அதன் சமீபத்திய, வெளியிடப்படாத தரவில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களில் 50 (2%) பேரில் ஒருவருக்கு 90 நாள்களுக்குப் பிறகும் நீண்ட கோவிட் அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகக் தெரிகிறது.

லாங் கோவிட் எப்படி வருகிறது?

வைரஸ் உடலின் பெரும்பகுதியிலிருந்து அழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் சில சிறிய இடங்களில் தொடர்ந்து நீடிக்கிறது. நீண்டகால வயிற்றுப்போக்கு இருந்தால், குடலில் வைரஸ் இருக்கலாம். அதே போல், வாசனை இழப்பு ஏற்பட்டால் அது நரம்புகளில் உள்ளது எனக் கருதப்படுகிறது. கரோனா வைரஸ் உடலில் உள்ள பலவகையான உயிரணுக்களை நேரடியாகத் தாக்கி அதிகப்படியான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதால் உடல் முழுவதும் சேதத்தை ஏற்படுத்துகிறது. லேசான கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் சுமார் 2 வாரங்களுக்குள் குணமடைந்து விடுகிறார்கள். ஆனால் ஆரம்பகால நோய் அறிகுறிகள் பல மாதங்களுக்கு இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

லாங் கோவிட் சிகிச்சை முறை

இதற்கு ஹோமியோபதி சரியான சிகிச்சையாகப் பார்க்கப்படுகிறது. மூன்று வாரத்திற்கு மேல் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஹோமியோபதி மருத்தை தான் பரிந்துரைத்தேன். அதில், நல்ல பலனை காண முடிந்தது. நோயாளிகளின் தனித்தன்மைக்கு ஏற்ப ஆர்செனிகம் ஆல்பம், ஆசிட் சர்கோலாக்டிகம், பெல்லடோனா, பிரையோனியா, காம்போரா, ஆக்ஸிலோகோசினம் போன்ற மருந்துகள் பயன்படுத்தலாம். ஆனால்,ஹோமியோபதி மருத்துவதரின் வழிகாட்டுதலின் பேரிலே இதை முயற்சிக்க வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்காக டாக்டர் ஏ.கே. அருணின் Docarun2@gmail.com என்ற மின்னஞ்சலை அணுகலாம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.