ETV Bharat / bharat

லண்டனில் பொதுமக்களை கத்தியால் தாக்கிய நபர் சுட்டுக்கொலை

லண்டன்: இங்கிலாந்தின் லண்டன் ஸ்ட்ரீதம் (Streatham) பகுதியின் வீதியில் செல்லும் பொதுமக்களை சரமாரியாகக் கத்தியால் தாக்கிய நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர்.

London
London
author img

By

Published : Feb 3, 2020, 11:37 AM IST

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்ட்ரீதம் பகுதியில் மதியம் 2 மணிளவில் ஒருவர் கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்காட்லாந்து காவல் துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல் உதவி ஆணையர் லூசி டி ஓர்சி கூறுகையில், "கொல்லப்பட்ட அந்த நபர் சுதேஷ் அம்மான் (20) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டனில் நடந்த குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்டு சமீபத்தில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அப்போது இவர் பயங்கரவாதக் குற்றங்களுக்காகப் பணியாற்றிவந்தால் கைதுசெய்யப்பட்டார். தற்போது இவர் மாறுவேடம் அணிந்துகொண்டு பயங்கரமான கொலைவெறித் தாக்குதலை முன்னெடுத்தார். பாதுகாப்பு காரணம் கருதி அவரை நாங்கள் சுட்டுக் கொன்றோம்" என்றார்.

இதேபோல 2019 நவம்பர் 29ஆம் தேதி உஸ்மான்கான் என்ற தண்டனை பெற்ற பயங்கரவாதி 2 பேரை கத்தியால் குத்தி கொலைசெய்ததும், அவரைக் காவல் துறையினர் சுட்டுக்கொன்றதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.