சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும் லோக்பால் உறுப்பினருமான அஜய் குமார் திரிபாதிக்கு ஏப்ரல் முதல் வாரம் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அவர் டெல்லியில் கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலை மோசமானதால், அவர் தீவிர கண்காணிப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு வென்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனிற்றி அவர் நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்தார்.
லோக்பால் அமைப்பின் நான்கு நீதித் துறை உறுப்பினர்களில் அஜய் குமார் திரிபாதியும் ஒருவர். அஜய் குமாரின் மறைவுக்கு பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரும் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடியும் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
திரிபாதியின் மரணம் நீதித் துறையில் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக நிதீஷ்குமார் தனது இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மஞ்சள் மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்தலாமா?- ஆய்வாளர்கள் புதுத் தகவல்