கரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற மழைக்கால அமர்வு தொடங்கியது. சுகாதார வழிகாட்டுதல்களின்படி அமர்வை நடத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் முதல் நாளான இன்று அனைத்து உறுப்பினர்களும் தங்களது வருகைப்பதிவை தேசிய தொழில்நுட்ப மையம் தயாரித்த செயலி மூலம் பதிவிட்டனர்.
உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்ற சபாநாயகர் ஓம் பிர்லா இந்த தொற்றுநோய் காலத்தில் பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றும்படி கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத்தொடரின் முதல் நாளில், பாஜகவைச் சேர்ந்த மீனாட்சி லேகி, அனந்த் குமார் ஹெக்டே, பர்வேஷ் சாஹிப் சிங் உள்ளிட்ட 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.