ETV Bharat / bharat

வெட்டுக்கிளி தாக்குதலைக் கட்டுப்படுத்த ராஜஸ்தான் அரசு ஒத்துழைக்கவில்லை : மத்திய அமைச்சர் - ராஜஸ்தான் அரசு

ராஜஸ்தான் அரசு ஒத்துழைத்திருந்தால், வெட்டுக்கிளிகளின் தாக்குதலை வெளி மாநிலங்களுக்குப் பரவாமல் அம்மாநிலத்திற்குள்ளேயே கட்டுப்படுத்தியிருக்க முடியும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

locusts-wont-have-spread-if-rajasthan-had-cooperated-kailash-choudhary

author img

By

Published : Jun 28, 2020, 7:47 PM IST

ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மார், பார்மெர், ஜோத்பூர், பிகானேர், ஸ்ரீ கங்கா நகர், ஜெய்ப்பூர், நாகௌர், அஜ்மர் மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பானா மாவட்டத்திலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள லலில்பூர் பகுதியிலும் வெட்டுக்கிளிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களைத் தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி பேசினார். அதில், ''வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கிய போதும், ராஜஸ்தான் அரசு எவ்வித முதற்கட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் எல்லைப் பகுதிகளில் வெட்டுக்கிளிகளைத் திறம்படக் கட்டுப்படுத்த முடியவில்லை.

மத்திய அரசு சார்பாக வெட்டுக்கிளிகளைத் தடுக்க 14 கோடி ரூபாய் கொடுத்தும், பாகிஸ்தானில் இருந்து பரவிய வெட்டுக்கிளியைத் தடுக்க ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் வெட்டுக்கிளிகளைத் தடுப்பதற்கு தேவையான எந்த இயந்திரங்களையுமோ அல்லது டிராக்டர்களையுமோ மாநில அரசு கொடுக்கவில்லை.

இதுவரை 10 மாநிலங்களைச் சேர்ந்த 90 மாவட்டங்கள் வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதனைத் தடுக்க மத்திய அரசால் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

ட்ரோன்கள் வழியாக மைக்ரோநைர் தெளிப்பான்களைப் பயன்படுத்தி வெட்டுக்கிளிகளைக் கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஹெலிகாப்டர் மூலம் கெமிக்கல் தெளிக்கப்படவுள்ளது. இங்கிலாந்திலிருந்து சில இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி விரைவில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்படும்'' என்றார்.

இதையும் படிங்க: கரோனாவை தொடர்ந்து அடுத்த சிக்கல் - படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.