உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்களின் முதன்மையான பண்டிகை ரமலான். இஸ்லாமியர்களின் புனித மாதத்தின் இறுதியில், ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடத் தடை விதிக்கப்பட்ட காரணத்தினால், மதவழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஆரையா (Auraiya) மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கு வீதியை மீறி, சட்ட விரோதமாக மசூதியில் இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து மசூதிக்கு விரைந்த காவல் துறையினர், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 28 நபர்களைக் கைது செய்தனர். மேலும், காவல் துறையினரைப் பார்த்து தலைமறைவான 4 நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுவரை அம்மாநிலத்தில் கரோனாவால் 6 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உற்சாகத்தை இழந்த ரமலான் - பள்ளிவாசல் முன்பு காவலர்கள் குவிப்பு