திருமணம் செய்து ஒரு பெண்ணை உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நபர், தன் சகோதரி அவரது மாமியார் வீட்டில் தாக்கப்பட்டதற்குப் பாதுகாப்பு கோரும் மற்றொரு நபர் என, கடந்த ஏப்ரல் மாதம் கரோனா ஊரடங்கு தொடங்கியது முதல் 315 குடும்ப வன்முறைகள் தொடர்பான புகார்கள் தேசிய பெண்கள் ஆணையம் (NCW) இல் பதிவாகியுள்ளன.
இந்த 315 புகார்கள் ஆன்லைன் மூலமாகவும், வாட்ஸ் அப்பிலும் பெறப்பட்டுள்ளன. கடந்த மாதம் தபால் மூலம் எந்தவொரு புகாரும் பெறப்படவில்லை. எனினும், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதலே குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளதை தேசிய பெண்கள் ஆணையத்தின் தரவுகள் காட்டுகின்றன.
முந்தைய மாதங்களில், இந்தப் புகார்கள் ஆன்லைன், தபால்கள் என, இரு வழிகளிலும் வந்துள்ளன. ஆனால் மார்ச் 25 ஆம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கு, அத்துமீறல்கள், துன்புறுத்துபவர்கள் ஆகியோரையும் பாதிக்கப்படுபவர்கள் என, இரு தரப்பினரையும் ஒன்றாக அடைத்து வைத்துள்ளது.
இதனால் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, தேசியப் பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார். சமீபத்தில் குடும்ப வன்முறை வழக்குகள் தொடர்பான புகார்கள் அளிக்க தேசியப் பெண்கள் ஆணையம், 7217735372 எனும் வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியது.
ஊரடங்கு காலத்தில் இந்த எண்ணில் பெறப்பட்ட புகார்கள் குறித்த சில வழக்குகளின் ஆய்வுகளை தேசியப் பெண்கள் ஆணையம் பகிர்ந்துள்ளது. அப்படி ஒரு வழக்கில், ஒரு பெண் தனது பெற்றோரால் தாக்கப்பட்டு, திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரைத் தொடர்ந்து தேசியப் பெண்கள் ஆணையம் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி, அவர் தங்கும் விடுதி ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றொரு வழக்கில், திரிபுராவில் உள்ள ஒருவர் தனது சகோதரி, அவரது மாமியார் வீட்டில் உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாவும், ஊரடங்கு காரணமாக அவரால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை என்றும் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் காவல்துறையினருடன் தாங்கள் ஒருங்கிணைந்து, அந்தப் பெண்ணை மீட்டதாக தேசியப் பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"ஒவ்வொரு வழக்கும் வேறுபட்டது, அதன் தேவைக்கேற்ப நாங்கள் செயல்படுகிறோம்" என தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் இதுகுறித்து தெரிவித்துள்ளார். பெண்கள் உடனடியாக உதவி பெறும் வகையில், இதுபோன்ற குடும்ப வன்முறை குற்றங்களில் புகார் அளிக்க தற்போது பல உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றின் கீழ் தேசிய பெண்கள் ஆணையத்தின் புள்ளி விவரங்களின்படி, பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 800 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு நாட்டில் பெறப்பட்ட ஒட்டு மொத்த புகார்களில், குடும்ப வன்முறைகள் குறித்த புகார்கள் மட்டுமே 40 விழுக்காடாக உள்ள சமயத்தில், மற்றொரு புறம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சைபர் குற்றங்கள் பெருமளவு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசியப் பெண்கள் ஆணையத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 54 சைபர் குற்றங்கள் தொடர்பான ஆன்லைன் புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் ஏப்ரல், மார்ச் மாதங்களில் ஆன்லைன், தபால் இரண்டின் வழியாகவும் முறையே 37, 21 புகார்கள் பெறப்பட்டுள்ளன. சுமார் 1.3 பில்லியன் மக்களை வீடுகளில் அடக்கி, இந்தியாவில் தற்போது உலகின் மிகப்பெரும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க அருமையான வாய்ப்பு-நிதின் கட்கரி