ETV Bharat / bharat

கோவிட்-19 பரவல் அதிகரிப்பால் டெல்லியில் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு ? - கரோனா பீதி

டெல்லி : கோவிட்-19 பாதிப்பு டெல்லியில் தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Lockdown in Delhi likely to be extended if corona cases surge unabated.

author img

By

Published : Jun 9, 2020, 9:40 PM IST

உலகளாவிய அச்சுறுத்தலான கோவிட்-19 பெருந்தொற்றுநோய் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, டெல்லியில் இதுவரை 29 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டும், 874 உயிரிழந்தும் உள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், பொருளாதார நிலைமைகளை சீர்ப்படுத்த தளர்வளிக்கப்பட்ட சூழலில் தொற்றுநோய் பரவல் வேகமெடுத்தால் டெல்லி அரசு செய்வதறியாது நிற்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருவதை தடுக்க தேசிய தலைநகரில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே ஊரடங்கு தளர்வு நடைமுறையில் இருப்பதால், டெல்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது. மேலும், சிவப்பு குறியீட்டுப் பகுதிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது குறித்து டெல்லி சுகாதார அலுவலர்கள் கூறுகையில், "கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கை மத்திய அரசு தளர்த்தி, வழங்கிய வழிகாட்டுதல்களை டெல்லி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இருப்பினும், ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன், டெல்லி முழுவதும் தகுந்த இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மக்கள் பெருமளவில் மீறி வருகின்றனர். இதுவே கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்புக்கு வழிவகுத்தது" என்றனர்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிலவும் படுக்கை பற்றாக்குறையை டெல்லி சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியதை அடுத்து டெல்லியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுமென டெல்லி அரசு அறிவித்தது. இந்த உத்தரவை டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நேற்று (ஜூன் 8) ரத்து செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.