ETV Bharat / bharat

இந்தியாவில் உள்ள 4 கோடி குழந்தைகள் லாக்டவுனால் பாதிப்பு - யுனிசெப் அமைப்பு தகவல் - யுனிசெப் அமைப்பின் இந்திய பிரதிநிதி யாஸ்மின் அலி ஹக்

டெல்லி: கரோனா லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் உள்ள நான்கு கோடி ஏழை சிறார்களின் நலன் குறித்து யுனிசெப் அமைப்பின் இந்திய பிரதிநிதி யாஸ்மின் அலி ஹக் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியின் தமிழாக்கம் இதோ...

UNICEF
UNICEF
author img

By

Published : Apr 20, 2020, 10:00 AM IST

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிப்பின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதன் தாக்கத்தால் குழந்தைகளின் மன நலன், உடல் நலன், அறிவு நலன் ஆகியவை கடும் பாதிப்பைச் சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

நாடு முழுவதும் 18 வயதுக்கு குறைவாக உள்ள 44.4 கோடி சிறார்களில் 4 கோடி ஏழை சிறார்களின் வாழக்கை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த சுகாதாரப் பேரிடர், குழந்தைகள் நலனில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் எழுந்துள்ளது.

இதில் நகர்புறங்களில் வசிக்கும் குழந்தைகள் பெரும் பாதிப்பிற்கு ஆளாவார்கள். குறிப்பாக தெருக்கள், சாலையோரம், மேம்பாலங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கை நேரடியாக பாதிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் மட்டும் சுமார் 70 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் இது போன்ற சூழலில் வசிக்கும் அவலம் உள்ளது.

இது குறித்து யுனிசெப் அமைப்பின் இந்திய பிரிதிநிதி யாஸ்மின் அலி ஹக் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திடம் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், கோவிட்-19 பாதிப்பு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், நகர்புற சேரி, பின்தங்கிய கிரமாப்புறம், குடிபெயர்ந்த குடும்பம் ஆகிய பின்னணியில் உள்ள குழந்தைகள்தான் பெரும் பாதிப்புக்குள்ளாகும் ஐயம் உருவாகியுள்ளது.

யுனிசெப் நிறுவனம் மத்திய, மாநில அமைச்சகம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக மிகவும் பாதிப்புக்குள்ளாகும் சூழலில் வசிக்கும் சிறார்களை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்து பாதுகாத்துவருகிறோம்.

இந்தச் சூழலில் வளரும் சிறார்களுக்கு முறையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மறுக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இந்தச் சூழலில் வசிக்கும் சிறார்கள் உதவி எண் மூலம் எங்களை தொடர்புகொள்ளும் பட்சத்தில் நாங்கள் உடனடி உதவிகளை மேற்கொள்கிறோம்.

இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் சிறார்களிடமிருந்து வந்துள்ளன. அவர்களின் மன நலன் மேம்பட ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் பள்ளிகள் இயங்காத சூழலில் அவர்கள் அறிவுநலன் பாதிக்காத வகையில் தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

பி.எஸ்.எஸ். வழிகாட்டுதலின் படி சிறார்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கை எடுத்துவரப்படுகிறது. அத்துடன் யுனிசெப் அமைப்பின் மூலம் இளைஞர்கள் அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவர்கள் மூலம் கள ஆய்வு செய்யப்படுகிறது. நேரடி கள ஆய்வு மூலம் முன்னணி நகரங்களின் விவரங்கள் கண்டறியப்படுகின்றன.

இதற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் 16 ஆயிரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் தேசிய மன நல அறிவியல் கழகத்துடன் இணைத்து யுனிசெப் அமைப்பு குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: செப்டம்பருக்குள் 10 லட்சம் தடுப்பூசி ஆய்வுகள்; ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.