நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 426ஆக உள்ளது. இதில் ஏழாயிரத்து 429 பேர் உயிரிழந்துள்ளனர். 70 ஆயிரத்து 622 பேர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வருகிற ஜூலை 31ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க : ஸ்டாலின் அறிக்கை அரசியல் செய்கிறார்- அமைச்சர் பாண்டியராஜன்