ETV Bharat / bharat

சரக்கு கிடைக்காத விரக்தியில் சானிடைசரை குடித்த அக்கா-தம்பி மரணம்! - கிம்ஸ் மருத்துவமனை

பெங்களூரு: ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபானம் கிடைக்காத விரக்தியில் சானிடைசரை குடித்த அக்கா- தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lockdown: Brother, sister die after consuming alcohol-based sanitiser in Karnataka
ஊரடங்கு : சரக்கு கிடைக்காத விரக்கதியில் சானிடிசரை குடித்த அக்கா-தம்பி இருவரும் உயிரிழப்பு!
author img

By

Published : Apr 20, 2020, 12:33 PM IST

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் 390 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 16 பேர் உயிரிழந்ததாக அம்மாநிலத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது.

கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா அரசு கடந்த 25ஆம் தேதிமுதல் முழுமையான ஊரடங்கை அறிவித்தது. இதனையடுத்து, பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. மேலும், கர்நாடகா முழுவதுமுள்ள மதுபானக்கடைகள், விடுதிகள், பார்கள், அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன.

கடந்த 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் பல மதுபான பிரியர்கள் மதுபானம் வாங்கமுடியாமல் தவித்துவந்துள்ளனர். ஒரு சிலர் கள்ளச்சாராயத்தை நோக்கி ஓடவும் தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில், மதுவுக்கு அடிமையாக இருந்துவந்த கர்நாடகா மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தை அடுத்துள்ள காம்பியாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஜம்பக்கா கட்டிமணி (47), அவரது தம்பி பசவராஜா வெங்கப்ப குருவினகோப்பா (45) ஆகிய இருவரும் கடந்த 25ஆம் தேதியிலிருந்து மதுபானம் கிடைக்காமல் அவதிப்பட்டுவந்துள்ளனர்.

Lockdown: Brother, sister die after consuming alcohol-based sanitiser in Karnataka
ஊரடங்கு: சரக்கு கிடைக்காத விரக்தியில் சானிடைசரை குடித்த அக்கா-தம்பி இருவரும் உயிரிழப்பு!

இந்நிலையில், சரக்கு வாங்கும் அவர்களது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த காரணத்தினால், விரக்தியில் சானிடைசரை போதைக்காக அருந்தியுள்ளனர். சானிடைசரை அருந்திய இரண்டு பேருக்கும், திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் ஜம்பக்கா கட்டிமணி, பசவராஜா ஆகிய இருவரும் சிகிச்சைப் பலனின்றி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மது கிடைக்காததால் சானிடைசரைக் குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபானத்திற்காக உயிரை விடும் சம்பவங்கள் சில நாள்களாக கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அரங்கேறிவருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பெங்களூரில் மதுபானம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.