கரோனா நெருக்கடி காரணமாக பல பேர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் கங்கபூர்வா கிராமத்தில் 32 வயதான புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விசாரணையின் பொது அவர் பெயர் தர்மேந்திரா எனவும் கரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக வேலை இழந்து நிதி நெருக்கடியில் தவித்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
டெல்லியில் வேலை செய்த இவர் ஊரடங்கு அறிவித்த பின் ஏப்ரல் மாதம் தன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
ஊருக்கு திரும்பிய பிறகும் எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது தங்கை திருமணம் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் செய்வதறியாமல் திகைத்த நிலையில் அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எல்லையிலிருந்து 2 கி.மீ. பின்வாங்கிய சீனப் படை - இந்திய ராணுவம் தகவல்