மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸ் தாக்கம் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அறிகுறிகள் இருக்கும் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 1,249ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காட்கோபர் (Ghatkopar) பகுதியில் உள்ள குடியிருப்பு அருகில் தனிமை மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், 'எங்கள் ஏரியாவில் கரோனா தனிமை மையம் அமைக்கக் கூடாது' என கும்பலமாகத் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களிடம் காவல் துறையினரும், மாநகராட்சி அலுவலர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானமாகி கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'கரோனாவால் நீரிழிவு நோயாளிகள் இறக்க அதிக வாய்ப்பு' - அதிர்ச்சித் தகவல்!