பிகாரில் நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஆணையம் பிகார் தேர்தலுக்கான தேதியினை அறிவிக்காமல் உள்ளது.
இதற்கிடையில் வரவிருக்கும் பிகார் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி தொடரும் என கடந்த வாரம் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக நம்மிடம் பேசிய லோக் ஜனசக்தியின் செய்தித் தொடர்பாளப் சஞ்சய் சிங், ”எதிர்வரும் பிகார் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதற்கு பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தற்போது பாஜக கூட்டணியில் இருந்தாலும், கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பட்டியல் வகுப்பின மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பெரும் விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது.
2013ஆம் ஆண்டு தேர்தலில் ஜனதா தளம் பாஜகவுடனான தனது 17 ஆண்டு கால கூட்டணியை முறித்து, தேர்தலில் பாஜகவை எதிர்த்து நின்றது. இருப்பினும், நாங்கள் கூட்டணியில் தொடர்வது குறித்தோ, விலகுவது குறித்தோ தற்போது வரை எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லை.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இடங்களைப் பகிர்வது குறித்து இறுதி முடிவெடுப்பதற்காக, கூட்டம் நடத்த கட்சி திட்டமிட்டுள்ளது” என்றார்.