நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்தது.
தெலங்கானா மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து, 484 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174ஆகவும் உள்ளது.
இந்நிலையில், காந்தி மருத்துவமனையில் இளநிலை பயிற்சி மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, இளநிலை பயிற்சி மருத்துவ மாணவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து, தங்களது பணிகளைப் புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், கரோனோ வைரஸின் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில், இந்தப் போராட்டம் நடைபெறக்கூடாது எனவும், மீண்டும் பணிகளில் ஈடுபடுமாறும், அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இளநிலை பயிற்சி மருத்துவர்களுடன் அரசு இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்லியடைந்ததால், மருத்துவர்களின் போராட்டம் நீடித்துவருகிறது.
இந்தப் போராட்டத்தினால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பிற நோயாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.