- கோபிநாத் முண்டே : மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான கோபிநாத் முண்டே, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்துள்ளார். புதுடெல்லியிலிருந்து மும்பைக்குச் செல்ல விமான நிலையம் சென்ற முண்டே, கார் விபத்தில் சிக்கி ஜூன், 3, 2014ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
- அனில் மாதேவ் தாவி : பாஜகவைச் சேர்ந்த அனில் மாதேவ் தாவி அரசியல்வாதி மட்டுமின்றி, சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த இவர், நெஞ்சுவலியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 2017ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி உயிரிழந்தார்.
- ஆனந்த் குமார் : மோடியின் அமைச்சரவையில் 2014ஆம் ஆண்டு முதல் மத்திய ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஆனந்த் குமார், உடல் நலக்குறைவால் 2018 நவம்பர் 12ஆம் தேதி உயிரிழந்தார்.
- மனோகர் பாரிக்கர் : கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்க்கர் கணைய புற்று நோய் காரணமாக 2019ஆம் ஆண்டு மார்ச் 17யில் உயிரிழந்தார். முன்னதாக பாரிக்கர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- சுஷ்மா சுவராஜ் : ஹரியானா மாநிலம், அம்பாலாவில் பிறந்த சுஷ்மா ஸ்வராஜ், சுகாதாரம், உள்துறை, வெளியுறவுத் துறை ஆகியவற்றில் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் 2019 ஆகஸ்ட் 6ஆம் தேதி உயிரிழந்தார்.
- அருண் ஜெட்லி : பாஜகவின் மிக முக்கியத் தலைவராக 35 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த அருண் ஜெட்லி, நிதித்துறை அமைச்சராக இருந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த இவர், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
- சுரேஷ் அங்காடி : கரோனா தொற்றுக்கு ஆளாகி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி உயிரிழந்தார்.
- ராம் விலாஸ் பஸ்வான் : மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று (அக். 8) காலமானார். அவருக்கு வயது 74. பஸ்வான், ஒன்பது முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். ஐந்து முறை மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இதையும் படிங்க...ஒரே தொகுதியில் 8 முறை மக்களின் உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட பஸ்வான்!