ETV Bharat / bharat

அசாமில் திறக்கப்பட்ட மதுபான கடைகள் .... சமூக விலகலைக் கடைப்பிடித்த மது பிரியர்கள்!

டிஸ்பூர்: அசாமில் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியைப் பின்பற்றி வரிசையாக நின்று மதுபானத்தை மது பிரியர்கள் வாங்கிச் சென்றனர்.

்ே
s்ே
author img

By

Published : Apr 14, 2020, 10:17 AM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், பல மாநிலங்களில் மக்கள் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அசாமில் நேற்று முதல் மதுக்கடைகளைத் திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் திறக்க வேண்டும் எனவும் கடைகளில் பணியாற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

அதே நேரத்தில் மேகாலயா அரசு, நான்கு நாள்களுக்கு மட்டும் மதுக்கடைகளைக் காலை 9 மணி முதல் 4 மணிவரை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது மது பிரியர்கள் காலையிலேயே கடைகளுக்கு முன்பு திரண்டு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: மது அடிமையில் சிக்கித் தவித்த மக்கள்... இலவசமாக சரக்கு அளித்த ஹைதராபாத் இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.