ETV Bharat / bharat

பி.எம்.வி.வி.ஒய் :அரசின் மானியத்துடன் கூடிய சிறப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம்! - PMVVY

மும்பை : மூத்த குடிமக்களுக்கான பிரதமர் வயா வந்தனா யோஜனா (பி.எம்.வி.வி.ஒய்.) எனும் சிறப்பு ஓய்வூதிய திட்டம் (திருத்தம்-2020), மீள் அறிமுகப்படுத்தப்படுவதாக எல்.ஐ.சி அறிவித்துள்ளது.

LIC launches modified PMVVY pension scheme, to be available for sale from Tue
பி.எம்.வி.வி.ஒய் :அரசின் மானியத்துடன் கூடிய சிறப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம்!
author img

By

Published : May 27, 2020, 12:18 PM IST

2017ஆம் ஆண்டு மத்திய அரசு, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்.ஐ.சி) இணைந்து 60 வயதுக்கும் மேலான மூத்த குடிமக்களுக்கான சிறப்பு ஓய்வூதிய திட்டமான பிரதமர் வயா வந்தனா யோஜனாவை அறிமுகப்படுத்தியது.

பிரதமர் வாயா வந்தனா யோஜனா (பி.எம்.வி.வி.ஒய்.) எனும் திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்.ஐ.சி) இணைந்து அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் 2018 மே 3ஆம் தேதிவரை விற்பனை செய்யலாம் என அறிவித்திருந்தது. பின்னர், அந்த கால அவகாசம் 2020 மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது அந்த சிறப்பு ஓய்வூதிய திட்டத்தை நிதியமைச்சகம் மாற்றியமைத்து, மீள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது, மே 26 முதல் 2023 மார்ச் 31ஆம் தேதி வரை மூன்று நிதியாண்டுகளுக்கு முதலீட்டாளர்களின் பயன்பாட்டிற்கு இருக்கும்.

இது தொடர்பாக எல்.ஐ.சி வெளியிட்டுள்ள குறிப்பில், “மத்திய அரசின் மானியத்துடன் வடிவமைக்கப்பட்ட எல்.ஐ.சியின் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணையம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காப்பீட்டு தொகையாக 15 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வழங்கும் இந்த சிறப்புத் திட்டத்தை இயக்க எல்.ஐ.சிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச நுழைவு வயதாக 60 வயது வரையறை செய்யப்பட்டுள்ளது. பாலிசி காலமானது 10 ஆண்டுகள் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஒரு முழுமையான நிதியாண்டு, அரை ஆண்டுகள், காலாண்டுகள், 12 மாதம் என ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் செலுத்த வேண்டிய குறைந்தபட்சம் கொள்முதல் விலை மாதத்திற்கு 1 லட்சத்து 62 ஆயிரத்து 162 ரூபாய், காலாண்டிற்கு 1 லட்சத்து 61 ஆயிரத்து 74 ரூபாய், அரை ஆண்டுகள் 1 லட்சத்து 59 ஆயிரத்து 574 ரூபாய், ஆண்டிற்கு 1 லட்சத்து 56 ஆயிரத்து 658 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் பெறக்கூடிய அதிகபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு 9 ஆயிரத்து 250 ரூபாய், காலாண்டிற்கு 27 ஆயிரத்து 750 ரூபாய், அரையாண்டிற்கு 55 ஆயிரத்து 500 ரூபாய், ஆண்டிற்கு 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இந்த திட்டங்களில் அதிகபட்ச ஓய்வூதியமானது ஒரு முழு குடும்பத்திற்கும், குடும்பத்தில் உள்ள மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்கள் ஆகியோர்களும் அடங்குவர். ஓய்வூதியம் என்.இ.எஃப்.டி அல்லது ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து பணம் வழங்கப்படும்.

பாலிசி காலம் - 10 ஆண்டு கால அவகாசம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதிர்வு சலுகைகள் - பாலிசி காலவரையிலும் வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு, கொள்முதல் விலை மற்றும் இறுதி ஓய்வூதிய தவணையும் சேர்த்து ஓய்வூதியதாரருக்கு வழங்கப்படும்.

இறப்பின் சலுகைகள் – பாலிசி காலத்தில் ஓய்வூதியதாரர் எதிர்பாராத சம்பவத்தில் இறக்கும் போது, நியமனதாரருக்கு கொள்முதல் விலை வழங்கப்படும்.

LIC launches modified PMVVY pension scheme, to be available for sale from Tue
பி.எம்.வி.வி.ஒய் :அரசின் மானியத்துடன் கூடிய சிறப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம்!

இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.40 % வருவாய் வழங்கும் என்ற உறுதி விகிதத்தை எல்.ஐ.சி முடிவு செய்துள்ளது. முதலீடு செய்தவருக்கோ அல்லது அவரது இணையருக்கோ எந்தவொரு முக்கியமான /மருத்துவச் சிகிச்சை போன்ற செலவுகள் ஏற்பட்டால், அதனை முன்வைத்து திட்டத்தில் இருந்து வெளியேறலாம். அப்போது, அதன் சரணடைதல் மதிப்பு கொள்முதல் விலையில் 98 சதவீதமாக நிர்ணையித்து வழங்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தெலங்கானாவில் அதிகரிக்கும் கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.