ETV Bharat / bharat

விஷவாயு கசிவு இழப்புகளுக்கு எல்ஜி பாலிமர்ஸே முழுப் பொறுப்பு - தீர்ப்பாயம் - மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

டெல்லி: விசாகப்பட்டினம் ரசாயன ஆலை விஷவாயு கசிவால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும், பொது சுகாதார சீர்குலைவுக்கும் காரணமான தென் கொரிய நிறுவனமான எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனமே முழுப் பொறுப்பை ஏற்கவேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்.ஜி.டி) கூறியுள்ளது.

விஷவாயு கசிவு இழப்புகளுக்கு எல்ஜி பாலிமர்ஸே முழுப் பொறுப்பு - தீர்ப்பாயம்

author img

By

Published : Jun 3, 2020, 8:50 PM IST

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வெங்கடாபுரம் என்ற கிராமத்தில் இயங்கிவந்த எல்.ஜி. பாலிமர்ஸ் தனியார் ரசாயன தொழிற்சாலையில் மே மாதம் 7ஆம் தேதி ஏற்பட்ட ஸ்டைரீன் விஷவாயுக் கசிவினால் ஒரு சிறுமி உள்பட 12 பேர் உயிரிழந்தும், 2000க்கும் மேற்பட்டோர் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சி.பி.சி.பி.), தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்.ஜி.டி.) ஆகியவை அந்நிறுவனத்திடம் விளக்கம் கோரியிருந்தன. குறிப்பாக, என்.ஜி.டி ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் இந்தச் சம்பவம் தொடர்பில் தானாக முன்வந்து மே 8ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்தப் பேரிடர் காரணமாக ஏற்பட்ட நாசங்களைக் கவனத்தில்கொண்டு முதல்கட்டமாக 50 கோடி ரூபாயை வைப்புத்தொகையாகச் செலுத்துமாறு எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலைக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியது. இந்த இடைக்கால அபராதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்காக செலவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் (2 பிரதிநிதிகள்), மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (2 பிரதிநிதிகள்), ஆந்திர அரசு (3 பிரதிநிதிகள்) அடங்கிய ஆய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையும், மறுசீரமைப்பு திட்ட வரைவும் கிடைத்தப் பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என என்.ஜி.டி. அறிவித்திருந்தது.

இந்நிலையில், அபராதம் கட்ட அறிவுறுத்திய அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி அந்நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த வழக்கு என்.ஜி.டி தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த அமர்வு, "சுற்றுச்சூழல் அமைச்சகம், சி.பி.சி.பி. மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவானது இழப்பீட்டின் இறுதி கணக்கீட்டை மதிப்பிட்டே இது குறித்து முடிவெடுக்க முடியும். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் செயலாளர், அத்தகைய ஆய்வுக் குழுவின் அதிகார வரம்பு இரண்டு வாரங்களுக்குள் உறுதிசெய்வார். அதன் பின்னர் இரண்டு மாதங்களுக்குள் குழு தனது அறிக்கையை வழங்கும்.

குறிப்பிட்ட, இந்த இரண்டு மாதங்களுக்குள் சட்டத்தையும், கட்டுப்பாடுகளையும் மீறி செயல்பட்ட அந்த நிறுவனத்தை அனுமதித்த நபர்களைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்படுகிறது. மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி அதன் செயல்பாட்டை மீண்டும் தொடங்க மாட்டோம் என அறிவித்திருக்கும் எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனத்தின் நிலைப்பாட்டையும் இந்த தீர்ப்பாயம் நினைவில் கொள்கிறது.

அதே சமயம், இது போன்று நிறுவனங்கள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவதைத் தடுப்பதற்கு கண்காணிப்பு பொறிமுறையை மறுசீரமைப்பதற்கான வழிகளையும் பரிந்துரைக்க ஒரு நிபுணர் குழுவை அமைக்கவும் இந்த தீர்ப்பாயம் அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்கிறது. இனிவரும் காலங்களில் அபாயகரமான ரசாயனங்களைக் கையாளும் எந்தவொரு நிறுவனத்திலும் இதுபோன்ற எந்தவொரு பேரிடரும் நிகழாமல் தடுக்க வேண்டும்.

குடிமக்களின் பாதுகாப்பும், சுற்றுச்சூழலின் பாதுகாப்பும் நமக்கு மிக முக்கியம். அவற்றில் அக்கறை கொண்டதாகவே எந்தவொரு பொருளாதார அல்லது தொழில்துறை நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். "நிலையான தீங்கற்ற வளர்ச்சி" என்ற கொள்கையை அரசு பின்பற்றும் போது தான் மனித வாழ்க்கை, சுற்றுச்சூழல், சமூகக் கட்டமைப்பு மீது இடர்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்" என்று கூறி உத்தரவிட்டது.

ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளபடி விஷ வாயுக்கசிவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாயும், விபத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியின் உதவியோடு சிகிச்சைப் பெற்றுவருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராம மக்களின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.10,000 இழப்பீடாக செலுத்துப்பட்டது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.