ETV Bharat / bharat

தென் கொரியாவுக்கு ஸ்டைரீனை அனுப்பும் எல்.ஜி. பாலிமர்ஸ் - ஸ்டைரீன்

எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் சேமிக்கப்பட்டுள்ள மற்றும் துறைமுகத்தில் உள்ள டாங்குகளில் இருக்கும் ஸ்டைரீன் ஆகியவற்றை தென் கொரியாவுக்குக் கொண்டுசெல்லும் பணியை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

lg-polymers-begins-shipment-of-styrene-to-south-korea

author img

By

Published : May 15, 2020, 11:51 AM IST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வெங்கடேஷ்புரம் பகுதியில் இருக்கும் எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் 12 பேர் உயிரிழந்ததோடு, 400க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆலையின் சேமிப்பில் வைக்கப்பட்டுள்ள ஸ்டைரீன் மோனோமர்ஸ், துறைமுகத்தில் உள்ள டாங்குகளில் இருக்கும் ஸ்டைரீன் ஆகியவற்றை தென் கொரியாவுக்கு கொண்டுசெல்லும் வேலை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்.ஜி. பாலிமர்ஸ் நிர்வாகத் தரப்பில் பேசுகையில், ''முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சேமிப்பில் உள்ள ஸ்டைரீன் கெமிக்கல் அனைத்தும் தென் கொரியாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. சியோலில் உள்ள எங்கள் நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு வந்துள்ளது.

அக்குழுவைச் சேர்ந்த வல்லுநர்கள் உற்பத்திக் குழு, சுற்றுச்சூழல் குழு, பாதுகாப்புக் குழு ஆகியவற்றுடன் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கவுள்ளனர். இதனோடு பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண உதவி வழங்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.

மே 7ஆம் தேதி விபத்து ஏற்பட்டதற்கான காரணம், இனி விபத்து நடக்காமல் இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இந்த விபத்திலிருந்த மீள்வதற்கான செயல்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தச் சூழலைச் சமாளிப்பதற்கான விரைவான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க சிறப்புப் பணிக்குழு செயல்பட்டு வருகிறது. அக்குழு பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து வருகிறது.

இவ்விபத்தால் ஏற்பட்ட சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கணக்கிடுவதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு, அதன் முடிவுகள் வெளிப்படையாக வெளியிடுவோம். இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்'' எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'எம்என்சி கம்பெனிகள் இந்தியாவில் உற்பத்தி செய்தால், அதுவும் உள்ளூர் பொருளாகவே பார்க்கப்படும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.