கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக அரசியல் களம் மாறிக் கொண்டே செல்கிறது. இதுவரை காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணியைச் சேர்ந்த 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளனர்.
இதில் இருவரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் தும்கூருக்கு செல்கின்றேன். உங்கள் அனைவருக்கும் கர்நாடகாவில் நடக்கும் அரசியல் சூழ்நிலை பற்றி தெரியும். பொறுத்திருந்து பாருங்கள். குமாரசாமி, சித்தராமையா சொன்னதற்கு நான் பதில் கூற முடியாது" என்றார்.