ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். இதேபோல், இந்த வருடம் கொண்டாடப்படவிருக்கும் 73ஆவது சுதந்திர தின விழாவில் பிரதமர் உரைக்கு உங்களது எண்ணங்களை பகிருங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆகஸ்ட் 15ஆம் தேதி எனது சுதந்திர தின உரைக்கான உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள உங்கள் அனைவரையும் அழைப்பதில் மகிழ்ச்சி. உங்கள் எண்ணங்கள் டெல்லி செங்கோட்டையின் சுவர்களிலிருந்து 130 கோடி இந்தியர்களுக்கும் கேட்கட்டும். இதற்கான கருத்துகளை பிரத்யேகமாக நமோ செயலியில் அனுப்புங்கள்” என பதிவிட்டுள்ளார்.